புளியரை: இலத்தூர் மதுநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு அதிகாலை அனுமநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. மாலை மதுநாதர் மற்றும் நந்தீஸ்வர மூர்த்திக்கு அனுமநதி தீர்த்தம், அஷ்ட திரவிய அபிஷேகங்கள் நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.