திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2022 03:12
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில், கார்த்திக்கை கடைஞாயிறை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி ஐம்பெருங்கடவுளர்கள் காட்சியும், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், திருக்கல்யாணமும் நடந்தது.
தொடர்ந்து இன்று(10ம் தேதி) காலை தேரோட்டத்தை முன்னிட்டு, பிறையணிய்யமன் சமேத நாகநாதசுவாமி சிறப்ப அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நாகநாத நாகநாத என முழக்கமிட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் ஆடவல்லான் புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியான நாளை (11ம் தேதி) காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 12ம் தேதி விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் எஸ்.சாந்தா, துணை ஆணையர் தா,உமாதேவி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.