வடமதுரை: வடமதுரை மேற்கு ரதவீதி முனியாண்டி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி கலச பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடந்தன. பால், தேன் உள்ளிட்ட பலவித திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராமதூது பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.