பதிவு செய்த நாள்
11
டிச
2022
02:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட துர்க்கை காளி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான துர்க்கை காளி என்கின்ற பிடி இருக்கி காளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு குரு வந்தனம், இரண்டாம் கால பூஜை, விஸ்வரூப தரிசனம், துவார பூஜை, வேதிக பூஜை, 108 மூலிகை ஹோமம், ஆகம பாராயணம், சுவாமி ரக்க்ஷா பந்தனம், நாடி சந்தானம், தத்துவர்த்தனை, மகாபூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், 9:40 மணிக்கு கடம் புறப்பாடாகி காசி விஸ்வநாதர் சிவாச்சாரியார் சுவாமிகள் வேத மந்திரம் முழங்க மூலவர் துர்க்கை காளிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.