பதிவு செய்த நாள்
14
டிச
2022
08:12
தென்தாமரைகுளம்: அகிலத்திரட்டு அம்மானை, அய்யா வழி பக்தர்களின் புனித நூலாகும். அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் கார்த்திகை மாதம் 27ம் தேதி.
இந்த நாளை ஒவ்வொரு வருடமும் அய்யா வழி பக்தர்கள் அகிலத்திரட்டு உதயதினமாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி
தலைமைப்பதியில் அகிலத்திரட்டு உதய தின விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. இ0தையொட்டி காலை 10 மணிக்கு பொதுமக்கள் கொண்டு வந்த அகிலத்திரட்டு அம்மானை நுாலை பள்ளியறையில் வைத்து சிறப்பு பணிவிடை நடந்தது. குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார். குரு பாலலோகாதிபதி, அய்யா வை குண்டர் அறநெறி ப ரிபாலன அறக்கட்டளை பொதுச்செயலாளர் கிருஷ்ண மணி, பொருளாளர் பால்மணி, இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட தலைவர் கோபால கிருஷ்ணன், மகளிரணி செயலாளர் சீதமனோன்மணி முன்னிலை வகித்தனர். அய்யா வழி பக்தர்கள் தலைமைப் பதி மற்றும் பள்ளி அறையை சுற்றி வந்து அகிலத்திரட்டு அம்மானை நுாலை பள்ளி அறையில் வைத்து வழிபட்டனர். பின்னர் அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழிபக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.