தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இந்தக் கடுமையான பனிப்பொழிவால் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் முற்றிலும் மறைந்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், பெரிய கோவிலுக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாக்கு வந்த நிலையில், பனி மூட்டத்தால், பெரிய கோவிலின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், பனிப்பொழிவுவில் மறைந்த ராஜ கோபுரத்தின் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு சென்றனர்.