சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்கான பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 08:12
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான அருள்மிகு சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான மங்கலம் ரோட்டில் தாமரைக் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலின் விமானம், அர்த்தமண்டபம், கற்பகிரஹம் உள்ளிட்டவைகள் மராமத்து பராமரிப்பு பணிகள் துவங்கும் வேலைக்காக பாலாலயம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கோவிலில் உள்ள மண்டபம்,விமானம் கோபுரத்தில் உள்ள சிலைகள் உள்ளிட்டவைகள் மிகவும் சிதிலமடைந்து கட்டிடம் ஆங்காங்கே இடிந்தும் மிக வலுவிழந்து நிலையில் காணப்பட்டதையடுத்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் செய்து புதுப்பிக்க ஹிந்து அறநிலையத்துறையினர் தீர்மானித்தனர். இதனையடுத்து சிவாச்சாரியார்கள் ஆருர சிவசுப்பிரமணியம், ஜெயக்குமார், கபாலீஸ்வரன், சிவக்குமார் உள்ளிட்டோர் வாஸ்து ஹோமம், கணபதி ஹோமத்தை செய்தனர். இதில், செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள், உபயதாரர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.