அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோயில் 50வது பொன்விழா ஆண்டு உற்ஸவ விழா 108 கோ பூஜை நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு மங்கல இசையும், 7:00 மணிக்கு கிராம தெய்வ வழிபாடு நடந்தன.கோயில் அருகே சிறப்பு யாகசாலை பூஜையும், கன்றுடன் 108 பசுக்களுக்கு தாமரை, அரளி, சம்பங்கி மலர்கள் மற்றும் அரிசியால் மக்கள் குடும்பத்துடன் பூஜை செய்து வழிபட்டனர். பசுக்களுக்கு மாலை, வேட்டி, சேலை அணிவித்து, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.மூலவர், பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் பக்தி பணி, விழா குழுவினர் செய்திருந்தனர்.