காளஹஸ்தி ஏழு கங்கை அம்மன் திருவிழா: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 08:12
திருப்பதி : காளஹஸ்தி சிவன் கோயில் தென் கையலாயமாக பெயர் பெற்று சிறந்து விளங்குகிறது. காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில் ஆன ஏழு கங்கை அம்மன் கோயில் திருவிழா நேற்று புதன்கிழமை (14.12.2022) மிகச் சிறப்போடு நடைபெற்றது. திருவிழாவையொட்டி காளஹஸ்தி நகரம் முழுவதும் பக்தர்கள் கடல் போல் காட்சி அளித்தனர். நள்ளிரவுக்கு (புதன்கிழமை ) பின்னர் அம்மன்களை நிமஞ்சன நிகழ்வோடு திருவிழா நிறைவடைந்தது. இந்நிலையில் ஏழு கங்கை அம்மன் திருவிழாவில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க ஸ்ரீகாளஹஸ்தி டிஎஸ்பி விஸ்வநாத் மற்றும் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் தலைமையில் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டதோடு போக்குவரத்தை சீர்படுத்தனர். நகருக்குள் கனரக வாகனங்கள் உட்பட ஆட்டோ போன்ற நான்கு சக்கர வாகனங்களையும் நகரில் 4 மாத வீதிகளில் அனுமதிக்காமல் தடுத்ததோடு பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அம்மன்களை தரிசிக்க போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
வழக்கமாக நாட்டின் மற்ற பகுதிகளில் வெயில் காலத்தில் நடக்கும் கங்கை அம்மன் திருவிழா இங்கு ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் டிசம்பர் மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம் .அதன்படி இன்று புதன்கிழமை ஏழு கங்கை அம்மன்களாக சகோதரிகளான மஞ்சள் குங்குமத்தை நிலைக்க வைக்கும் பொன்னாளம்மன் ; அபயம் அளிக்கும் முத்தியாலம்மன் ; அனைவரும் நலமாக இருக்க வரம் அளிக்கும் காவம்மன் ; கருணை நல்கும் அங்கம்மன் ; பீட பிசாசுகளை விரட்டும் கருப்பு கங்கை அம்மன் ; சுமங்கலியாக நிறுத்தம் அங்காளம்மன் ; சந்தான தேவதையாக அருள் புரியும் புவனேஸ்வரியம்மன் " ஏழு அம்மன்களுக்கும் ஒரே நாளில் திருவிழா நடப்பது இங்கு சிறப்பும் மகிமையும் வாய்ந்ததாகும் .நகரின் ஏழு பகுதிகளில் எழுந்தருளிய கங்கை அம்மன்கள் மீண்டும் ஒரே மீண்டும் ஒரே பகுதியில் இணைந்து நிமஞ்சனத்திற்கு செல்வது வாயு லிங்கேஸ்வரர் சேஷத்தரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .இத் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது .7 கங்கை அம்மன் திருவிழாவை ஒட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் திருமண மண்டபம்; பேரிவாரி மண்டபம் ஜெயராம்ராவ் தெரு ;சன்னதி தெரு ;தேர் வீதி; காந்திவீதி உட்பட கொத்தப் பேட்டை போன்ற ஏழு பகுதிகளில் கங்கை அம்மன்கள் எழுந்தருளினர். திருவிழா கமிட்டியினர் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன்களை (உற்சவ மூர்த்திகளை) அலங்கரித்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை மிகவும் கவரும் வகையில் இருந்தது.ஏழு கங்கை அம்மன்கள் எழுந்தருளிய பகுதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டும் சிறப்பு மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தனர்.
முன்னதாக நள்ளிரவிற்கு பிறகு ஏழு கங்கையம்மன் கோயிலில் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஏழு கங்கை அம்மன்களின் (உற்சவமூர்த்திகளின்) திரையை அகற்றி பக்தர்களுக்கு தரிசனம் ஏற்படுத்தினர் .கோயிலிலிருந்து ஏழு அம்மன்களும் ஒருவர் பின் மற்றொருவர் என தொடர்ந்து சிவன் கோயில் திருமண மண்டபம் வரை ஊர்வலம் நடைபெற்றது .ஸ்ரீகாளஹஸ்தி நகர பக்தர்கள் உட்பட சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர் .இங்கு பக்தர்கள் கும்பம் நெய்வேத்தியமாக சமர்ப்பித்து சேவல் மற்றும் ஆடு போன்ற விலங்குகளை பலி கொடுத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். காலை 9:00 மணிக்கு 7 பகுதிகளிலும் கங்கை அம்மன் கள் எழுந்தருளி காலை முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர். பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடன்களையும் செலுத்திக் கொண்டதோடு இரவு மீண்டும் 7 அம்மன்களும் முத்தியாலம்மன் கோயில் தெருவில் ஏழு கங்கை அம்மன் கோயில் வரை ஊர்வலம் ஆக வரிசையாகச் சென்று உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்ததை தொடர்ந்து நிம்மஞ்சனும் செய்தனர் .