பதிவு செய்த நாள்
16
டிச
2022
02:12
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் நேற்று மண்டல பூஜை நடந்தது.
கருமத்தம்பட்டியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, தினமும் மண்டல பூஜை அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று, 48 வது நாள் மண்டல பூஜை , விநாயகர் பூஜையுடன் துவங்கியது. பல்வேறு திரவியங்களை கொண்டு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள், கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. மண்டல பூஜை முடிந்ததை ஒட்டி, 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள், ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர்.