ஐயப்ப சுவாமி கோயில் மார்கழி உற்சவம் கொடியேற்று விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2022 10:12
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி நன்மை தருவார்கள் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மார்கழி உற்சாகத்திற்கான கொடியேற்று விழா நடந்தது. கோயில் வளாகத்தில் 49 அடி உயர மாகாளியம்மன், ஸ்ரீ குரு பகவான் உட்பட 21 சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு உற்சவ விழாவுக்கான கொடியேற்று விழா நேற்று நடந்தது. விழாவில் ஐயப்ப சுவாமி, மாகாளி அம்மன், குருபகவான் உட்பட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தலைமையில் விழா கமிட்டியினர் கோயில் வளாகத்தில் கொடியேற்றினர். டிசம்பர் 27 ல் கோயிலில் 1008 பூஜையுடன் ஐயப்பசுவாமி, அம்மன் ஊர்வலமும், டிசம்பர் 28 ல் 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு பாலாபிஷேகம், பூச்சொறிதல், 18ம் படி விளக்கு பூஜைகள் நடைபெறும் என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.