அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2022 08:12
வீ.கே.புதுார்: வீ.கே.புதுார் தாலுகா, ஊத்துமலை, மலை அடிவாரம், அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை (23ம் தேதி) நடக்கிறது. வன்னிக்கோனேந்தல் அருகே ஊத்துமலை, மலை அடிவாரம், அனுமந்தபுரி (சீவலபுரம் கரடி உடைப்பு பஞ்சாயத்து) ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு மேல் நவக்கிரஹ, சுதர்சன, ஆஞ்சநேய மூலமந்திர ஜெப ஹோமம், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. சுற்றுப்பகுதி பக்தர்கள் திரளாகக்கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேயர் பக்தசபா, ஊத்துமலை, மலை அடிவார கிராம மக்கள் செய்துள்ளனர்.