வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அனுமனுக்கு பால், பழம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை பக்தர்கள் 10 கிலோ எடையில் பெரிய அளவிளான கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.