பெரம்பலூர் : பெரம்பலூர் நகரிலுள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் பகல் பத்து உற்சவத்தை யொட்டி, நேற்று (23ம்தேதி)மாலை 6 மணியளவில், முதல் ஆரம்பம் 1ம் புறப்பாடு நடைபெற்றது. பெருமாள்- பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.