திருக்கோவிலூர் ரகூத்தமர் மூலபிருந்தாவனம் ஜன., 1ல் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2022 08:12
திருக்கோவிலூர், மணம்பூண்டி, ரகூத்தமர் மூலபிருந்தாவனம், ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு ஜனவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
பாவபோதகர், உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீ ரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 450 வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு ரகுத்தமர் மூல பிருந்தாவனத்தின் சுற்றுச்சுவர், ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் ஜனவரி 1ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு மூலபிருந்தாவனத்திற்கு நிர்மல்ய அபிஷேகம், 8:30 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பிருந்தாவன சுற்றுச்சுவர், ராஜகோபுரங்களுக்கு உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து பகல் 11:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மூலராமர் பூஜை, தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கிறது. தொடர்ந்து 4 நாட்கள் ஆராதனை விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவுப்படி பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாச்சாரிய சிம்மலகி செய்து வருகிறார்.