உலகளந்த பெருமாள் கோவிலில் ராமர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2022 08:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாள் விழாவில் பெருமாள் ராமர் அலங்காரத்தில் அருள்பாலிப்பது.
நடுநாட்டு திருப்பதி, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் பத்து நாட்கள் பகல் பத்து விழாவாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவின் நான்காம் நாளான இன்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம் 5:30 மணிக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை, தொடர்ந்து பக்தர்கள் சேவை. காலை 9:00 மணியில் இருந்து10:00 மணி வரை நித்திய பூஜைகள். தேகளீசபெருமாள், குலசேகர ஆழ்வார் எழுந்தருளி திருமஞ்சனம். மதியம் 2:00 மணிக்கு பாண்டியன் மண்டபத்தில் தேகளீச பெருமாள், குலசேகர ஆழ்வாருடன் எழுந்தருளி முதலாவதுஆயிரம், பெரிய திருமொழி சேவாகாலம் மூன்று முப்பது மணிக்கு சாற்று முறை 4:00 மணிக்கு தேகளீச பெருமாள் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி ஆலய பிரதட்சனமாக வலம் வரும் வைபவம் நடந்தது.