பரமக்குடியில் நாளை காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2023 10:01
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோயிலில் டிச., 23 துவங்கி பகல் பத்து உற்சவம் நடந்து வரும் நிலையில், இன்று மாலை 4:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிக்கு பின், 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது. அன்று தொடங்கி ராப்பத்து உற்சவம் பத்து நாட்கள் நடக்கும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர். *எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு 5:30 மணிக்கும், பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு காலை 6:00 மணிக்கு நடக்க உள்ளது.