பதிவு செய்த நாள்
03
செப்
2012
11:09
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் கீழமாயனூரில் உள்ள மல்லியண்ண மல்லாண்டவர் பிள்ளையார் கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற கீழமாயனூர் மல்லியண்ண மல்லாண்டவர் கோவிலில், நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடப்பதையொட்டி, மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. மாலை ஆறு மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தி முதற்கால வேதிக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, மஹா தீபராதனை போன்றவை நடந்தது. இன்று காலை ஆறு மணிக்கு இரண்டாம் கால பூஜை, 7.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ., காமராஜ், பஞ்சாயத்து யூனியன் தலைவர் முத்துசாமி, தொகுதி செயலாளர் நகுல்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கீழமாயனூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.