ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தண்டுமாரியம்மன் மகளிர் வழிபாட்டுகுழு சார்பில் சுபமங்கள மாங்கல்ய பூஜை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் கோவிலில் மகளிர் வழிபாட்டுகுழு,மற்றும் பொதுமக்கள் சார்பில் அனைத்து மக்களுக்கும்,சகல சௌபாக்கியங்களும் பெற வேண்டி சுபமங்கல மாங்கல்ய பூஜையானது நேற்று நடைபெற்றது.முன்னதாக நேற்று மாலை பவானி ஆற்றிலிருந்து தீர்த்தகுடம் எடுத்து வந்து,மாரியம்மனுக்கு ஆராட்டு விழா,நடத்தப்பட்டது.இன்று காலை 8மணிக்கு துர்கா லட்சுமி,சரஸ்வதி ஹோமம்,நடத்தப்பட்டது.11மணிக்கு மஹா அபிஷேகம்,1மணிக்கு அலங்கார தீபாராதனை,நடைபெற்றது.மாங்கல்ய பூஜையில் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்துபெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.