ஊட்டியில் தோடர் பழங்குடியினர் நடனத்துடன் 11 வது ஆண்டு ஆருத்ரா தரிசன பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 11:01
நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் உள்ள ஸ்ரீ பவாணிஸ்வரர் ஸ்ரீ நடராஜமூர்த்தி - ஸ்ரீ சிவகாம சுந்தரேஸ்வரி கோவிலில் ஆண்டு தோரும் ஆருத்ரா தரிசன பெருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு 111வது ஆருத்ரா தரிசன மஹாற்சவ பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடன் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு ஊட்டியின் முக்கிய சாலைகளில் திருவீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள பாறைமுனிஸ்வரர் கோவில் முன்பு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திரு.அம்ரித் அவர்கள் சாமிதரிசனம் செய்தார். மேலும் ஊட்டி மாரியம்மன் கோவில் வந்தடைந்த திருத்தேருக்கு கோவிலின் சார்பாக தீபாராதனை காண்பிக்கப்பட்டு தொடர் பழங்குடின மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.