திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2023 08:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 49 வது ஆராதனை விழா தீர்த்த நாராயண பூஜையுடன் நிறைவடைந்தது.
திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 49 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த மாதம் 25ம் தேதி கணபதி ஹோமம், பாத பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை விசேஷ பாத பூஜை, லட்சாக்சனை பூர்த்தி, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ அதிஷ்டான பூஜைகள், மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.