பழநி கோயில் கருவறையில் மீண்டும் சிலை பாதுகாப்பு வல்லுனர் குழு ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2023 11:01
பழநி: பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேக பணிக்காக இரண்டாவது முறையாக கருவறையில் சிலை பாதுகாப்பு வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பழநி மலை முருகன் கோயில் கும்பாேஷகத்தை முன்னிட்டு அரசு சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட நவபாஷாண சிலை பாதுகாப்பு வல்லுனர் குழு நவ. 11ல் சிலையை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இக்குழுவினர் முறைப்படி பூஜைகள் செய்து மீண்டும் கருவறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கோயில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக் கூட்டம் இரவில் பல மணி நேரம் நீடித்தது. நீதிபதி பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், வல்லுநர்கள், கோயில் ஸ்தபதி பங்கேற்றனர்.