பதிவு செய்த நாள்
10
ஜன
2023
01:01
விக்கிரமசிங்கபுரம்: அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு பாபநாசம் அகஸ்தியர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும், அகஸ்தியருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
அகஸ்தியர் கோயில் கார்த்திகை கமிட்டி மற்றும் ராமநாதபுரம் பக்தர்கள் சார்பில் அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு அகஸ்தியர் கோயிலில் காலையில் விக்னேஷ்வர பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. முன்னதாக கல்யாணதீர்த்தம் அருவிக்கரையில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் பமுத்ரா சமேத அகஸ்தியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் அகஸ்தியர் கோயில் கார்த்திகை கமிட்டி தலைவர் சுப்பையா, அமைப்பாளர்கள் முருகேசன், ராமலிங்கம், ராமநாதபுரம் ஐஸ்வர்யா ஓட்டல் ங்கடசுப்பு, திருமூலர், இன்ஜினியர் ரத்தினவேல், டாக்டர் கோபு, ஆல்வின் ஸ்கூல் துளசிராம், வக்கீல் தினேஷ், ஸ்ரீநிதி ஓட்டல் ங்கை நாச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.