ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று மகரஜோதியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் ஐயப்ப சுவாமிக்கு( உற்சவ மூர்த்தி)க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால் ,தயிர், நெய் ,சந்தனம், இளநீர் உட்பட புனித கலச நீரினால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐயப்ப சாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதோடு தீப, தூபம் கற்பூர தீபாராதனை சமர்ப்பித்தனர். தொடர்ந்து நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்தனர் .இந்த சிறப்பு அபிஷேக பூஜையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் வேத பண்டிதர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.