காளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறியும், பூக்குழி இறங்கி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2023 07:01
உசிலம்பட்டி: சிலம்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கொங்குவார் நாயுடு சமூகத்துக்கு பாத்தியப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், கருப்பசாமி, காளியம்மன் கோவில் திருவிழா மார்கழி மாதம் கடைசி நாளில் தொடங்கி தை பொங்கல் விழாவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுவர். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று ஊர்வலமாக உசிலம்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். ஆங்காங்கே பூசாரிகள் அரிவாள் மீது நடந்து அருள் வாக்கு தந்தனர். கோயில் முன்பாக பூசாரிகள், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர்.