பொங்கல் பண்டிகை கோலாகலம்: தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2023 11:01
சென்னை: இன்று பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழர்கள் திருநாள் என அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் நம் வாழ்வுக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காலை வேளயைில் புத்தாடை அணிந்து வீட்டிற்கு முன்பு மண்பானைகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து சூரியனுக்கு படைக்கின்றனர். மண்பானைகளில் மஞ்சள் காப்பு அணிவிப்பார்கள். பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமான கரும்புகளை வைத்தும் மக்கள் வழிபடுவார்கள் பொங்கல் பண்டிகை 2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. பொங்கல் பண்டிகை்கு முதல் நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளை சுத்தம் செய்து பெண்கள் பண்டிகைக்கு தயாராகிறார்கள். போகிப் பண்டிகையன்று மாலை வேளையில் வீடுகளில் காப்பு கட்டு கட்டி விடுவார்கள். பொங்கலுக்கு முதுல் நாளில் வண்ணக் கோலங்கள் இட்டு பெண்கள் பொங்கலை வரவேற்கின்றனர். போகிப் பண்டிகை, வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை என வருடம் தோறும் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டா டப்படுகிறது
ஜல்லிக்கட்டு: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. மதுரை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டின் போது நூற்றுக்கணக்கான காளைகளும், வீரர்களும் கலந்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் வாசகர்கள் அனைவருக்கும் தினமலர்.காம் பொங்கல் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.