பதிவு செய்த நாள்
15
ஜன
2023
11:01
பழநி, பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள குலுக்கல் முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஜன.18 முதல் 20 வரை இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜன.27ல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஜன.18 முதல் 20 வரை www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.in.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம். பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஏதாவது ஒன்றை சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். இமெயில், அலைபேசி நம்பர் தெரிவிக்க வேண்டும். ஜன. 21 அன்று குலுக்கல் முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு இமெயில், அலைபேசி எண்ணிற்கு ஜன.22 ல் தகவல் அனுப்பப்படும். ஜன.23 24ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பழநி ஆர்.எப். ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் கட்டணமில்லா அனுமதி சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த சீட்டு ரோப் கார், வின்ச் சேவைக்கு பொருந்தாது. அனுமதி சீட்டு பெற்றவர்கள் படிப்பாதை வழியாக மட்டுமே வர வேண்டும் என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.