ரிஷிவந்தியம் : ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் மூடப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான அரங்கநாத பெருமாள் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி பகல்பத்து உற்சவமும், ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் முடிந்த நிலையில், சொர்க்க வாசல் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி உற்சவர் அரங்கநாத பெருமாள் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் மூலவர் மற்றும் உற்சவரை தரிசத்து, சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்த பிறகு, மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களுடன் சொர்க்க வாசல் மூடப்பட்டது.