வில்லியனுார் : வில்லியனுார் அருகே உள்ள சற்குரு நவபாஷான சித்தர் ஜீவ பீடத்தில் குருபூஜை விழா நடந்தது.
வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான சந்திக்குப்பம் கிராமத்தில் சற்குரு நவபாஷான சித்தர் ஜீவபீடம் உள்ளது. இங்கு நேற்று மகா குரு பூஜை விழா நடந்தது. இதையொட்டி, நவபாஷான சித்தர் பீடத்திற்கு நவக்கிரக பூ மாலைகள் அணிவித்து, காலை 5:00 முதல் மாலை 6:00 மணி வரை கோ பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணியளவில் சித்தர் ஜீவ பீடத்தில் மூலிகை அபிேஷகம் மற்றும் 108 சங்கு அபிேஷகம் நடந்தது. காலை 10:00 மணியளவில் புனித கலசநீர் புறப்பாடு, பகல் 11:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை சந்திகுப்பம் கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.