ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2023 10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி முகூர்த்தக்கால் நடும் விழா கோயில் வளாகத்தில் நடந்தது. இக்கோயிலில் மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்குகிறது. மார்ச் 21ல் பங்குனி அமாவாசை அன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், மறுநாள் மார்ச் 22ல் தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான நாள் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை கோயில் வளாகத்தில் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு முகூர்த்த கால், வீதிகள் சுற்றி வந்து கோயில் வளாகத்தில் நடப்பட்டது. பூஜாரி சுந்தர் சிறப்பு பூஜைகள் செய்தார்.