தை அமாவாசை முன்னிட்டு கோவிலில் குவிந்த பக்தர்கள்: மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2023 04:01
நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து மோட்ச தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர். தை அமாவாசையை முன்னிட்டு பித்ருக்களுக்கு நதிக்கரையோரம் உள்ள கோயில்களில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து மோட்ச தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் சந்ததியினர் நோய், நொடியின்றி இன்றி வாழலாம் என்பது ஐதீகம். இன்று அணைப்பட்டி வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து மோட்ச தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். அமாவாசையை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை முதல் இரவு வரை திறந்து வைக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அலங்காரம் சந்தன காப்புடன் சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் விஜயராகவன் குழுவினர் நடத்தினர்.