பதிவு செய்த நாள்
21
ஜன
2023
04:01
தஞ்சாவூர், கும்பகோணத்தில், 11 அடி உயர விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு, தை அமாவாசையை முன்னிட்டு, 10,008 ஏலுமிச்சையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், காமராஜ் நகரில், 11 அடி உயர விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவரான விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 10,008 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில், வறட்சியில் இருந்து மக்களை காக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.