சரவணம்பட்டி, கோவை ரத்தினகிரி மலை மருதாசல கடவுளுக்கு 1500 பால்குடங்கள், தேன் குடங்கள் அபிஷேகம் நடந்தது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு ரத்தினகிரி மலையில் மருதாசல கடவுள் முருகன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று முருகனுக்கு பால் குட விழா நடக்கிறது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு பால்குட விழா , குமரகுருபர சாமிகள் தலைமயில் நடந்தது. ரத்தினகிரி மலைப்பகுதியை சுற்றிலும் உள்ள முருக பக்தர்கள், தை அமாவாசையை முன்னிட்டு பால்குடங்கள் எடுக்கின்றனர். பால்குடங்கள் தவிர, தேன், தயிர் குடங்கள் எடுக்கின்றனர். நோயற்ற வாழ்வும், சமுதாயத்தில் அமைதியும் நிலவ பால் குடங்களை எடுக்கின்றனர். குழந்தை பேறு வேண்டும் தம்பதியர்கள் தயிர்குடம் எடுக்கின்றனர். தொழில் அபிவி்ருத்தி விரும்புவோர் தேன் குடங்கள் எடுக்கின்றனர். நேற்று முன் தினம் இரவு நடந்த இந்த பால்குட அபிஷேகத்தில் 1008 பால் குடங்கள், 108 தேன் குடங்கள், 500க்கும் மேற்பட்ட தேன் குடங்களும் காவடியாக எடுத்து வந்தனர். இவை, முருக பெருமானாக வீற்றிருக்கும் மருதாசலக்கடவுளுக்கு அபிஷேகமாக நடந்தது. இரவு 11 மணி வரை நடந்த அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானமும் நடந்தது.