பதிவு செய்த நாள்
23
ஜன
2023
09:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச திருவிழா, வரும், 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்ற பின், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் காலையும், மாலையும், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான, பிப்ரவரி 4ம் தேதி, காலை, 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், பகல், 12:00 மணிக்கு, தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வுவான தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. தைப்பூச திருவிழா, பிப்ரவரி, 7ம் தேதி நிறைவடைகிறது.