அன்னூர்: மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் 27ம் தேதி துவங்குகிறது. மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், 56 ம் ஆண்டு தேர்த்திருவிழா வரும் 27ம் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. வரும் 28ம் தேதி அதிகாலையில் காப்பு கட்டுதலும், காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும் இரவு 8:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 29ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 30 ம் தேதி இரவு அனுமந்த வாகனத்திலும், 31ம் தேதி இரவு கருட வாகனத்திலும் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. பிப். 1ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு புஷ்பவாகனத்தில் சுவாமி திருவிதி உலா நடக்கிறது. பிப். 2ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் உலா நடக்கிறது. பிப். 3ம் தேதி காலை 5:30 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. ஏற்பாடுகளை அலுவலர்கள், பரம்பரை அரங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.