பதிவு செய்த நாள்
26
ஜன
2023
10:01
கடையம்: கடையம் கைலாசநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்கின. நாளை (27ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. கடையம் ஸ்ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர்- பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், தட்சிணாமூர்த்தி, சனிபகவான், நவக்கிரஹங்கள் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். கோயிலில் நாளை (27ம்தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி பூர்வாங்க பூஜைகள் துவங்கின. 3ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு மிருத்ஸங்கிரஹணம், தீர்த்த ஸங்கிரஹணம், பூஜை, திபூஜை, மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் , தீர்த்தகுட ஊர்வலம், பாலிகாஸ்தாபன ம் , ரக்ஷாபந்தனம், லாகர்ஷணம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 4ம் நாளான இன்று (26ம்தேதி) காலை 8மணிக்கு விசேஷசந்தி 2ம் கால யாகசாலை பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கு ம்பாபிஷேக நாளான நாளை (27ம்தேதி) காலை 4 மணிக்கு 2ம் கால யாகசாலைபூஜை 5.30 மணிக்கு யாத்ராதானம், காலை 6 மணிக்கு கும்பம் எழுந்தருளல், காலை 6.45 மணிக்கு மேல் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. 7.15 மணிக்கு மூலஸ்தானம், பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம், தீபாராதனை மகா அபிஷேகம் அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, சுவாமி அம்பாள் வீதியுலா, சண்டேஸ்வரர், பைரவ பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் முருகன், தக்கார் கோமதி, ஆய்வாளர் சரவணகுமார், பக்தர் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.