பதிவு செய்த நாள்
29
ஜன
2023
10:01
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள தென்திருப்பதியில், ரத சப்தமியை முன்னிட்டு, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
சிறுமுகை அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேச வாரி கோவில் உள்ளது. இங்கு ரத சப்தமியை முன்னிட்டு, நேற்று காலை, நான்கு மணிக்கு சுப்ரபாதமும், அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், சூரிய பிரபை புறப்பாடும் நடந்தது. பின்பு காலை, 8:30 மணியிலிருந்து சேஷ வாகனம், அன்னபட்சி, அனுமந்த வாகனங்களில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம், 12:30 மணிக்கு சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளினார். கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில், தேரோட்டம் நடைபெற்றது. கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரோட்டத்தில் பங்கேற்ற பெண் பக்தர்கள், கையில் தீபம் ஏற்றிய தட்டுடன் சுவாமியை வழிபட்டனர். மாலையில் முத்து பந்தல், கருட சேவை சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அதைத் தொடர்ந்து இரவு ஆஸ்தானமும், ஏகாந்த சேவையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி குடும்பத்தினர், கே.ஜி., தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.