புதுச்சேரி கோரிமேட்டில் முதல்வர் ரங்கசாமி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் நடந்த குருபூஜை விழாவில் முதல்வர் ரங்கசாமி, சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டார். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் சபாநாயகர் செல்வம் துணை சபாநாயகர் ராஜவேலு அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் தேனி ஜெயக்குமார் சந்திர பிரியங்கா அரசு குழு ஆறுமுகம் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.