பதிவு செய்த நாள்
31
ஜன
2023
12:01
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகைவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு, மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணியளவில் கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மலைக் கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. ஏற்பாடுகளைமயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோன்று, மயிலம் அடுத்த தென்பசியார் பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேக, வழிபாட்டிற்குப்பின் மூலவர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.