காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : ஆலோசனைக் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2023 12:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடக்க உள்ள வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை ஒருங்கிணைந்து கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு என அனைவரும் ஒருங்கிணைந்து பிரம்மோற்சவ விழாவை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாக அதிகாரி கேவி சாகர்பாபு கோரினார் இன்று திங்கட்கிழமை மாலை கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயிலின் அனைத்து துறை அதிகாரிகளுடன் நிர்வாக அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் .இக் கூட்டத்தில் சாகர்பாபு பேசுகையில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்ச பணிகளை அதிகாரிகள் விரைவு படுத்த வேண்டும் என்றும் மகாசிவராத்திரி உற்சவ சமயம் நெருங்கி வருவதால் அதிகாரிகள் தங்களுக்கு ஒப்படைத்துள்ள பணிகளை விரைந்து முடிக்க செய்ய வேண்டும் என்றார் .கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து பணிகளில் ஈடுபட்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்படை செய்ய வேண்டும் என்றார். சிவன் கோயில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு பண்டிகை ஆக (விழாவாக) கருத வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் . மகா சிவராத்திரி பிரம்மோற்சவ உற்சவத்தின் போது பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.குறிப்பாக மகா சிவராத்திரி அன்று சாதாரண பக்தர்களுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மகா சிவராத்திரி அன்று பிரபலங்கள் (வி.ஐ.பி.கள்) தரிசனத்திற்காக (சிறப்பு) சமயம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .அச் சமயத்தில் சாதாரண பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரியை யொட்டி கோயிலில் சிறப்பு அலங்காரம் ,பிரசாதங்கள், வாகன சேவைகள், நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் போன்றவை குறித்து அவர் கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .இந்தக் கூட்டத்தில் கோயில் துணை நிர்வாக அதிகாரிகள் ,கண்காணிப்பாளர்கள், பொறியியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.