பதிவு செய்த நாள்
02
பிப்
2023
10:02
புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில் கட்டப்பட்டுள்ள புதிய தேர் நிறுத்தும் மண்டபத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார்.
புதுச்சேரி பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில், கோவிலின் கிண்ணி ரத தேரை நிறுத்துவதற்காக, புதிய மண்டபம் கோவில் எதிரில் 15 லட்ச ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ளது. தேர் மண்டபம் மற்றும் நிர்வாகிகள் பெயர் கல்வெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து புதிய மண்டபத்திற்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம். எல். ஏ.,க்கள் ராமலிங்கம்,வெங்கடேசன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில், இந்து முன்னணி தமிழ்நாடு மாநில செயலாளர் சனில்குமார், ஐந்து வகுப்பு மரபினர்கள்,புதுச்சேரி பிரதேச விஸ்வகர்ம சமுதாய அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.