மொட்டையன் கோயில் கும்பாபிஷேகம்: இஸ்லாமியர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2023 10:02
திருப்புவனம்: திருப்புவனம் மொட்டையன் கோயில் கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ததுடன் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.
மொட்டையன் கோயில் கும்பாபிஷேக விழா 37 ஆண்டுகளுக்கு பிறகு நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 30ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து கண்ணன் பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் கோயிலை வலம் வந்தனர். காலை 9.45 மணிக்கு கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மொட்டையன் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது திரு ஆபரண பெட்டிக்கு புதூர் சையது இஸ்மாயில் மவுலியா பள்ளி வாசலில் து ஆ ஓதி அனுப்புவது வழக்கம், கடந்த 28ம் தேதி திரு ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளித்த இஸ்லாமியர்கள் நேற்று கும்பாபிஷேக விழாவிலும் பங்கேற்றனர். இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.