உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ ரேணுகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ ரேணுகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 9ம் தேதி காலை 9 மணியளவில் ஸ்ரீ கணபதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து ஹோமம், மாலை 6 மணி அளவில் கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை ஆரம்பம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் யாக சாலை ஆரம்பம், காலை 9.30 மணியளவில் கடம் புறப்பாடும், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.