திருப்புவனம்: கீழடி அருகே பசியபுரத்தில் கள்ளி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடந்தது. கீழடி பசியாபுரத்தில் கள்ளி முத்துமாரியம்மன் கோயில் புனரமைப்பு பணிகளை நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 6 மணிக்கு யாக சாலையில் இருந்து ஸ்ரீகுமார் ஐயங்கார் தலைமையில் சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். காலை 10 மணிக்கு தங்க வர்ணம் பூசிய கோபுர விமானத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கீழடி, பசியாபுரம், கொந்தகை, முனியாண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.