பழநி: பழநியில் தைப்பூச விழாவை தொடர்ந்து இன்று (பிப்.12) எடப்பாடி பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர்.
பழநியில் சமிபத்தில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது. இதனை தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் பழநி வந்தடைந்தனர். இவர்கள் 365 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி மலைக் கோவிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர். இன்று (பிப்.12) பால் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரைக் காவடி,இளநீர் காவடி, ஆகியவற்றுடன் ஆட்டம் பாட்டத்துடன் சேலம்,சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக பழநி வந்து சேர்ந்தனர். பெரியநாயகி அம்மன் கோயில் வந்து அதன்பின் மலைக்கோயில் வந்தடைந்தனர். மலைக்கோயிலில் பூ கோலமிட்டு, படி பூஜை செய்து, சாயரட்சை பூஜையில் தரிசனம் செய்தனர். முன்னதாக மலைக்கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கத் துவங்கினர். முன்னதாக பழநிக்கு வருகை புரிந்ந பல ஆயிரம் எடப்பாடி பக்தர்களுக்கு 15 டன்னுக்கும் மேல் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் இவர்கள் நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்தனர். பழநி மலைக்கோயிலில் இரவில் தங்கி தரிசனம் செய்ய பருவதராஜகுல சமுதாய மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.