ராஜபாளையம்: ராஜபாளையம் பெரிய கடை பஜார் வள்ளலார் தெரு உமா மகேஸ்வர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை மங்கல இசையுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை வேள்விகள் அதனை தொடர்ந்து சனிக்கிழமை வேத பாராயணம், பூர்ணாஹுதி, மருந்து சான்றுகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன் மூல மந்திர கோமங்கள் தொடங்கி காலை 7:35 முதல் 8:30 மணி வரை உமா மகேஸ்வர விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் அதனை தொடர்ந்து அலங்காரம் தீபாராதனை நடந்தது. மதியம் சிறப்பு அன்னதானமும் மாலை பூஜை நடைபெற்றன. கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் வெள்ளான் செட்டியார் சமூக நிர்வாகிகள் செய்திருந்தனர்.