திருத்தணி: திருத்தணியில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது.
இதற்காக கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், வேத பாராயணம் மற்றும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் விமானம்மற்றும் மூலவருக்கு மஹா புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின், மூலவருக்கு அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.