கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் கிராமத்தில், பட்டத்தரசியம்மன் கோவிலில், ஒன்பதாவது ஆண்டு விழா நடந்தது.
செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், நேற்று ஒன்பதாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பண்ணாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, விநாயகர் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். அதன்பின், பக்தர்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக சென்று, பட்டத்தரசியம்மன் கோவிலை அடைந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின், அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.