கீழக்கரை: ஏர்வாடி தர்கா அருகே ஏராந்துறை கிராமத்தில் உள்ள பப்பரப்புலி தர்ம முனீஸ்வரர் கோயிலில் 8ம் ஆண்டு மாசி களரி பூக்குழி உற்ஸவ விழா நடக்க உள்ளது. கடந்த பிப்., 10 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. பிப்., 18 சனிக்கிழமை அன்று இரவு 11:00 மணிக்கு மேல் நேர்த்திக்கடன் பக்தர்களால் பூக்குழி இறங்கும் உற்ஸவம் நடக்க உள்ளது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம், கிடா வெட்டுதல், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பூசாரி முனியசாமி மற்றும் ஏராந்துறை கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.