காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வெள்ளி அம்பாரிகள் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2023 05:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி நெல்லுரைச் சேர்ந்த (ACT )தனியார் தொலைக்காட்சி ( சிஇஓ) பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்புள்ள (சாமி அம்மையார்கள்) ஊர்வலத்தில் பயன்படுத்தும் வெள்ளி அம்பாரிகளை (பல்லுக்குகள்) காணிக்கையாக வழங்கினர்.
கோயில் வளாகத்தில் உள்ள 16 கால் மண்டபம் அருகில் இந்த வெள்ளி அம்பாரிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகளைத் தொடர்ந்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் வெள்ளி அம்பாரிகளை பெற்றுக் கொண்டனர் .மேலும் பாலசுப்ரமணியம் க்கு நன்றி தெரிவித்ததோடு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.கோயிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு சுவாமி அம்மையார்களின் படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.